Wednesday, January 26, 2011

ஜாதகம் பார்ப்பதால் நன்மையா? தீமையா?-4

4 ஆவது காரணத்திற்கான விளக்கம்: (விளக்கம்-3)

பாவத்தின் சம்பளம் மரணம். பாவ மன்னிப்பு கோருதல். உலகில் பிறந்த அனைத்து உயிர்களும், என்றோ ஒரு நாள் இறக்கத்தான் செய்யும், இதில் மனிதன் விதி விலக்கல்ல. அப்படி என்றால், 100 % மக்கள், எல்லோரும் பாவம் செய்கிறார்கள், அதனால் தான் மரணம் சம்பவிக்கிறது என்று சொல்லுகிறார்களா? பைபிள் வழி வந்த அனைத்து அப்போஸ்தலரும், கிறிஸ்துவும், அவர் சீடர்களும், போப் ஆண்டவர் உட்பட அனைவரும் பாவம் செய்தவர்கள்தான், அதனால் தான் அவர்களுக்கும் இறப்பு ஏற்படுகிறது, என்று ஒப்புக் கொள்கிறார்களா? கிறிஸ்து மீண்டும் உயிர்த்து எழுந்தார், அதனால் அவரைச் சொல்ல இயலாது, அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்று வாதிடுவோரும் உளர். அவர்களுக்காக ஒரு ஸ்பெஷல் பதிவை பிறகு இடுகிறேன்.

பாவத்தின் சம்பளம் மரணம் என்றால், உலகில் எத்தனையோ குழந்தைகள் பல காரணங்களால் இறக்கின்றன. அக்குழந்தைகள் என்ன பாவம் செய்தன? அவ்வளவு சிறிய வயதில் பாவம் செய்ய இயலுமா? இதற்கு இவர்கள் சொல்லும் பதில் என்ன? அக்குழந்தைகள் போன ஜென்மத்தில் பாவம் செய்து இருக்கும், அதனால் இந்த ஜென்மத்தில், இந்த சிறிய வயதில் மரணம் நேருகிறது என்று சொல்லுவார்களோ? அப்படியென்றால், அவர்கள் முற்பிறவிப் பயன், ஊழ்வினை போன்ற பாரத நாட்டின், தத்துவங்களை, மெய்ஞானத்தை, ஏற்றுக் கொள்கிறார்கள் என்று தானே அர்த்தம். எனக்குத் தெரிந்த வரை, பைபிளிலும், அதனைத் தொடர்ந்து வந்த குரானிலும், பல பிறவிக் கொள்கை இருப்பதாகத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் தயவு செய்து ஆதாரத்துடன் தெரிவிக்கலாம்.

திருவள்ளுவர், ஊழ்வினைக்கு ஒரு அதிகாரம் ஒதுக்கியுள்ளார். ஜோதிட சாஸ்திரத்திலும், நமது ஞானிகள் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று ஜாதகத்தில் ஒரு வீட்டை ஒதுக்கியுள்ளார்கள். அதனைக் கொண்டு, உங்கள் முற்பிறவிப் பயனை அறிந்து கொள்ளலாம். முற்பிறவியின் வழியாக, இப்பிறவியில் உங்களுக்கு கிடைக்கும் யோக, அவயோகங்களை சொல்லலாம்.

கற்றல் ! தெளிதல் ! தெளிவித்தல் ! என்ற கொள்கையுடன்

உங்கள் அன்பன்
இராம்கரன்

tamiljatakam@gmail.com

எமது அடுத்த பதிவு:

ஜாதகம் பார்ப்பதால் நன்மையா? தீமையா-5


2 comments:

ஞாஞளஙலாழன் said...

நல்ல பதிவு. இதற்கு பதில் கிடைக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா என்ன?

முற்பிறவி போன்றவற்றின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு பேச்சுக்கு, பல பிறப்புகள் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். போன பிறவியில் நான் எப்படி இருந்தேன் என்று எனக்குத் தெரியாது.செய்த தவறு என்னவென்றே தெரியாமல் எப்படி தண்டனை அனுபவிப்பது?

ramkaran said...

ஜோதிட சாஸ்திரத்தில், நமது ஞானிகள் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று ஜாதகத்தில் ஒரு வீட்டை ஒதுக்கியுள்ளார்கள். அதனைக் கொண்டு, உங்கள் முற்பிறவிப் பயனை அறிந்து கொள்ளலாம். முற்பிறவியின் வழியாக, இப்பிறவியில் உங்களுக்கு கிடைக்கும் யோக, அவயோகங்களை சொல்லலாம்.
கற்றல் ! தெளிதல் ! தெளிவித்தல் ! என்ற கொள்கையுடன்

அன்பன்
இராம்கரன்