சனிபகவான் - அறிவியல்
சனி (Saturn) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஆறாவதாக அமைந்துள்ள ஒரு கோள். சூரியக்குடும்பத்தில் இது இரண்டாவது பெரிய கோளாகும்.
சனி கிரகத்தின் விட்டம் 1,20,536 கி.மீ. அதாவது, பூமியைப் போல 10 மடங்கு விட்டம் உள்ளது. சூரியனை சுற்றி வர சுமார் 29 வருடம், 167 நாட்கள், 6.7 மணி நேரம் ஆகிறது. இதைத்தானய்யா இந்திய ஜோதிடமும் கூறுகிறது, ஒரு இராசிக்கு, சுமார் 21/2 வருடம் என்றால், 12 இராசிக்கு சுமார் 30 வருடம் என்று ஜோதிடம் கூறுகிறது. சனியின் மேற்பரப்பில் காணும் புவியீர்ப்பு விசை ஏறக்குறைய பூமியைப் போன்றதே, அதாவது 8.96 m/s2 பூமிக்கு இந்த மதிப்பு 9.8 m/s2ஆகும்.
சனிக்கோள் ஹைட்ரஜன் (Hydrogen) வாயுவால் அதிக அளவிலும், ஹீலியம் (Helium) மற்றும் ஒருசில தனிமங்களால் சிறிய அளவிலும் நிரப்பப்பட்டுள்ளது. சனியில் காற்றின் வேகம் வியாழனை விடவும் அதிகம், அதாவது 1800 கிமீ/மணி வரையிலும் இருக்கக்கூடும்.
சனிக்கோளின் சிறப்பான வளையங்கள், பெரும்பான்மையாக பனித்துகள்களாலும் பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளாலும் ஆனவை. சனியின் நன்கறிந்த நிலவுகள் மொத்தம் 61. இதைத்தவிர, சுமார் 200 நிலவுக்குட்டிகள் (moonlets) சனிக்கு உள்ளன. சனிக்கோளின் மிகப்பெரிய நிலவான டைட்டன் (Titan), புதன் கோளை விடவும் பெரியது.
கிரக வளையங்கள் கொண்ட சனி நம் சூரிய குடும்பத்தில் ஒரு குறிப்பிடத்தக்க கிரகமாக விளங்குகிறது . இவ்வளையங்கள் சனியின் பூமத்திய ரேகைக்கு மேல் சுமார் 6630 கி.மீ.இலிருந்து 120700 கி.மீ வரை நீண்டிருக்கிறது , அதன் சராசரி தடிமன் 20 மீட்டர். கலீலியோ கலிலி - 1601-இல் சனி கிரகத்தின் வளையங்களை முதன் முதலில் கண்டறிந்தவர்.
அன்பன்
இராம்கரன்
No comments:
Post a Comment