Wednesday, January 26, 2011

ஜாதகம் பார்ப்பதால் நன்மையா? தீமையா?-2

2 ஆவது காரணத்திற்கான விளக்கம்: (விளக்கம்-1)
இறைவனை வழிபடுவதை மறந்து, ஜோதிடரை நம்பி, அவர் பின்னால் சென்றுவிடுவார்கள் என்று பயப்படுவது ஒருதேவையில்லாத பயமே. ஜோதிடத்தைப் பற்றி வேதங்களிலேயே நிறைய விஷயங்கள் உள்ளது. திதி கணக்கிடுதல், சூரிய, சந்திர கிரகணங்களைக் கணக்கிடுதல் போன்றவைகளும் வேதத்தில் உள்ளது. இதற்கும் மேலாக, வேதத்தை ஒரு மனிதனாக உருவகம் செய்தால், அந்த வேத புருஷனுக்கு கண்கள் தான் ஜோதிடம் என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளது. அப்படி ஒரு உயர்ந்த இடத்தை ஜோதிடத்திற்கு வேதங்கள் கொடுக்கும் போது, அது எப்படி இறைவனுக்கு எதிராகும்? அது எப்படி இறைவனை மறக்கும் செயலாக அமையும்? ஜோதிடத்தை ஒரு தெய்வீக சாஸ்திரமாகவே கருத இடமிருக்கிறது. ஜோதிடமும், இறைவழிபாடும் பின்னி பிணைந்தே உள்ளது. ஜோதிடம் நன்கு அறிந்தவர்கள், இதனை உணர்வார்கள். ஜோதிடர் பின்னால், மக்கள் போய்விடுவார்கள் என்பது கற்பனையே ! ஒரு நல்ல ஜோதிடர், ஜாதகத்தின் தன்மைக்கு ஏற்ப, இறைவனை வழிபடச் சொல்லியே, அறிவுறுத்துவார் என்பதே எமது கருத்தாகும். ஜோதிடர் உங்களுக்கு, இறைவழிபாட்டை நினைவுபடுத்தவே செய்வார். இறைவனை மறந்து, என் பின்னால் வாருங்கள் என்று ஒரு போதும் சொல்லமாட்டார். இறைவனுக்கு இணை இறைவனே ! என்பதனை அவர் நன்கு அறிந்தவராகவே இருப்பார்.

கற்றல் ! தெளிதல் ! தெளிவித்தல் ! என்ற கொள்கையுடன்

உங்கள் அன்பன்
இராம்கரன்

tamiljatakam@gmail.com

எமது அடுத்த பதிவு :

ஜாதகம் பார்ப்பதால் நன்மைய? தீமையா?-3


2 comments:

ராவணன் said...

பிராமணர்களின் வேதம் ஒரு உயர்ந்த பொருளா? அதில் கூறிவிட்டால் அப்பீல் இல்லையா?

பிராமணர்கள் வேதத்தைத் தொகுக்கும் முன் இந்த புவியில் மனிதர்கள் வாழவில்லையா? அவர்களுக்கு எந்த பண்பாடும் இருக்கவில்லையா?

விண்ணியல், புவியியல், அறிவியல் என்று அனைத்தையும் கற்று தெளிவு பெற்ற தமிழர்களைவிட பிராமணர்களின் வேதம் பெரிதோ?

சமசுகிருதமே ஒரு டப்பா மொழி, பிராமணர்கள் கிறுக்கிய வேதத்திற்கு ஒரு எழவும் பொருளில்லை.

சோதிடம் என்பது பண்டைய தமிழர்களின் பண்பாட்டு மரபு.

ஜோதிடம் என்பது அதன்பின் வந்த பிராமணர்களின் பண்பாட்டுத் திரிபு.

முதலில் சரியாகக் கற்கவேண்டும், பின்பே தெளிவடையலாம்.
தெளிவித்தலா...அதற்கு வாய்ப்பு கிடைக்குமா?

ramkaran said...

அன்பர் இராவணன் அவர்களே! பின்னூட்டத்திற்கு நன்றி! ஜோதிடத்தின் சிறப்பை உயர்த்தவே, வேதத்தைக் கூறினேன். ஒரு பதிவில் தமிழில் எழுதப்பட்ட கோளறு திருப்பதிகத்தையும் பதிவிட்டுள்ளேன். என்னுடைய எந்த பதிவிலும், சமஸ்கிருத மந்திரங்களைப் பற்றி கூறவில்லை, பதிவு இடவில்லை. ஒவ்வொரு கிரகத்திற்கும் தமிழில் உள்ள போற்றிகளையே பதிவிடுகிறேன். என்னுடைய கொள்கை வெறும் தெளிவித்தல் மட்டும் அல்ல. கற்றலும் தான். ஜோதிடம் பற்றிய குறிப்புகள் தமிழ்ச் செய்யுட்கள், அல்லது இலக்கியங்களில் இருந்தால், அதனை என் கவனத்திற்கு கொண்டு வந்தால், தங்களுக்கு நன்றி உடையவனாவேன்.
கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்