2 ஆவது காரணத்திற்கான விளக்கம்: (விளக்கம்-1)
இறைவனை வழிபடுவதை மறந்து, ஜோதிடரை நம்பி, அவர் பின்னால் சென்றுவிடுவார்கள் என்று பயப்படுவது ஒருதேவையில்லாத பயமே. ஜோதிடத்தைப் பற்றி வேதங்களிலேயே நிறைய விஷயங்கள் உள்ளது. திதி கணக்கிடுதல், சூரிய, சந்திர கிரகணங்களைக் கணக்கிடுதல் போன்றவைகளும் வேதத்தில் உள்ளது. இதற்கும் மேலாக, வேதத்தை ஒரு மனிதனாக உருவகம் செய்தால், அந்த வேத புருஷனுக்கு கண்கள் தான் ஜோதிடம் என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளது. அப்படி ஒரு உயர்ந்த இடத்தை ஜோதிடத்திற்கு வேதங்கள் கொடுக்கும் போது, அது எப்படி இறைவனுக்கு எதிராகும்? அது எப்படி இறைவனை மறக்கும் செயலாக அமையும்? ஜோதிடத்தை ஒரு தெய்வீக சாஸ்திரமாகவே கருத இடமிருக்கிறது. ஜோதிடமும், இறைவழிபாடும் பின்னி பிணைந்தே உள்ளது. ஜோதிடம் நன்கு அறிந்தவர்கள், இதனை உணர்வார்கள். ஜோதிடர் பின்னால், மக்கள் போய்விடுவார்கள் என்பது கற்பனையே ! ஒரு நல்ல ஜோதிடர், ஜாதகத்தின் தன்மைக்கு ஏற்ப, இறைவனை வழிபடச் சொல்லியே, அறிவுறுத்துவார் என்பதே எமது கருத்தாகும். ஜோதிடர் உங்களுக்கு, இறைவழிபாட்டை நினைவுபடுத்தவே செய்வார். இறைவனை மறந்து, என் பின்னால் வாருங்கள் என்று ஒரு போதும் சொல்லமாட்டார். இறைவனுக்கு இணை இறைவனே ! என்பதனை அவர் நன்கு அறிந்தவராகவே இருப்பார்.
கற்றல் ! தெளிதல் ! தெளிவித்தல் ! என்ற கொள்கையுடன்
உங்கள் அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com
எமது அடுத்த பதிவு :