Tuesday, October 4, 2011

சுக்கிரன் - ஓர் ஆய்வு

சுக்கிரன் பொது

பொதுவாக சுக்கிரன் இல்லற வாழ்க்கையை குறிக்கும் கிரகமாகும். அதனால் தான் அவரை களத்திரகாரகன் என்று ஜோதிடம் கூறுகிறது. மேலும், சுக்கிரனே ஆடம்பர வாழ்க்கை, ஆபரணச் சேர்க்கை, பங்களா போன்ற பெரிய வீட்டில் வாழும் வாழ்க்கை, வண்டி, வாகன யோகம் போன்றவற்றிற்கும் அவரே காரகனாகிறார். நவகிரக தசாக்களில் இவருடைய தசா காலமே, மிகப்பெரியது ஆகும். அதாவது சுக்கிர தசை 20 வருடங்களாகும்.

சுக்கிரன் அறிவியல்

சுக்கிரன் சூரியனிலிருந்து 2 வது கிரகமாக, சூரியனை சுமார் 224 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. (பூமி 365.25 நாட்கள் எடுத்துக் கொள்கிறது). பூமியிலிருந்து பார்க்கும் பொழுது, சந்திரனுக்கு அடுத்தபடியாக பிரகாசமாக இருப்பது சுக்கிரனே. அளவில், அது ஏறக்குறைய பூமியின் அளவேயாகும். புவியீர்ப்பு விசை பூமியை போன்றே இருக்கிறது. 96 சதவீதம் கார்பன்டை ஆக்ஸைடு இருக்கிறது. அதன் மேற்பரப்பில் காணும் வெப்ப நிலை 460 டிகிரி செண்டிகிரேட் ஆகும். சுக்கிரனின் மேற்பரப்பில் நின்று பார்த்தோமானால், சூரியன் மேற்கே உதயமாகி, கிழக்கே அஸ்தமனமாகும். மற்ற கிரகங்களைப் போல் அல்லாது இது எதிர் திசையில், தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறது. ஆனால் சூரியனை மட்டும் நம் பூமியைப் போலவே நேர் வழியில், நீள் வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. சுக்கிரனின் பகல் பொழுது, பூமியின் கணக்குப் படி பார்த்தால் 117 நாட்களாகும். அதாவது சுக்கிரனில் ஒரு சூரிய உதயத்திற்கும், மறுநாள் சூரிய உதயத்திற்கும் எடுத்துக்கொள்ளும் கால அளவு சுமார் 243 நாட்கள் வரையாகும். அவ்வளவு மெதுவாகத் தன்னைத் தானே சுற்றுகிறது. உண்மையில் இது ஒரு அதிசய கிரகம்தான்.

சுக்கிரன் காரகத்துவம்

இந்தப் பதிவின் தொடக்கத்தில் உள்ள பத்தியைப் படித்துக்கொள்ளவும். நேரம் கிடைத்தால், காதல் மன்னன் என்ற தலைப்பில் வந்த முந்தையப் பதிவுகளை படிக்கவும்.

சுக்கிர தசா

பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் ஜனித்த ஜாதகருக்கு தொடக்க தசையாக சுக்கிர தசை வரும். சுக்கிர தசை மொத்தம் 20 வருடங்கள். தொடக்க தசையாக வரும்போது பெரும்பாலும் 20 வருடத்தை விட குறைவாகவே வரும். இடையில் வரும் தசையாக இருந்தால், 20 வருடம் முழுமையாக வரும். மேற்கூறிய நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை, நட்சத்திரத்தை எவ்வளவு பாகம் கடந்துள்ளதோ அவ்வளவு விகிதம் தசையில் கழிவு ஏற்படும். அதனை ஜோதிடத்தில் கர்ப்பச்செல் என்று குறிப்பிடுவார்கள். சுக்கிர தசையில் சுக்கிரன் காரகத்துவம் என்ற தலைப்பில் கூறப்பட்ட விஷயங்கள் ஜாதகருக்கு நடைபெறும், மேலும் ஜாதகரின் ஜென்ம லக்கினத்தைப் பொறுத்து, பா (Bhava) அடிப்படையில், சுக்கிரன் தரும் பலன்களும் நடைபெறும்.

இனி ஜோதிட ரீதியாக சுக்கிரனின் பயோடேட்டாவை பார்க்கலாம்.

சுக்கிரன்பயோடேட்டா

ஆட்சி பெறும் ராசி

ரிஷபம், துலாம்

உச்சம் பெறும் ராசி

மீனம்

நீச்சம் பெறும் ராசி

கன்னி

நட்பு பெறும் ராசிகள்

மிதுனம், தனுசு, மகரம், கும்பம்

சமம் (நியூட்ரல்)

மேஷம், விருச்சிகம்

பகை பெறும் ராசிகள்

கடகம், சிம்மம்

மூலத்திரிகோணம

துலாம்

சொந்த நட்சத்திரம்

பரணி, பூரம், பூராடம்

திசை

கிழக்கு

அதிதேவதை

லட்சுமி

ஜாதி

பிராமணன்

நிறம்

வெள்ளை

வாகனம்

கருடன்

தானியம்

மொச்சை

மலர்

வெந்தாமரை

ஆடை

வெண்பட்டு

இரத்தினம்

வைரம்

செடி / விருட்சம்

அத்தி

உலோகம்

வெள்ளி

இனம்

பெண்

அங்கம்

மர்ம ஸ்தானம்

நட்பு கிரகங்கள்

புதன், சனி, இராகு, கேது

பகை கிரகங்கள்

சூரியன், சந்திரன்

சுவை

இனிப்பு

பஞ்ச பூதம்

அப்பு

நாடி

சிலேத்துமம்

மணம்

இலவங்கம்

மொழி

வட மொழி, தெலுங்கு

வடிவம்

சம உயரம்

சுக்கிரனுக்குரிய கோயில்

கஞ்சனூர்

சுக்கிரன் போற்றி

சுக்கிர மூர்த்தி சுபமிகு ஈவாய் !
வக்கிரமின்றி வரமிகு தருவாய்! வெள்ளிச்
சுக்கிர வித்தக வேந்தே! அள்ளிக்
கொடுப்பாய் அடியார்க்கருளே !

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்

அன்பன்

இராம்கரன்

tamiljatakam@gmail.com


7 comments:

Ramesh said...

வணக்கம் திரு.இராம்கரன்,
அருமையானப் பதிவு, பல புதிய தகவல்கள் தந்துள்ளீர்கள். நன்றி!!! உங்களது சேவை வளரட்டும்.... கேள்வி-பதில் பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம. தாங்களுக்கு ஆயுதபூஜை,சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள்!!!
அன்புடன்,
ரமேஷ்.M

ramkaran said...

வாழ்த்துக்கு, மிக்க நன்றி! கூடிய விரைவில் கேள்வி-பதில் பகுதியை தொடங்குவோமாக !!

Yaathoramani.blogspot.com said...

விஞானப் பூர்வமாகவும் நமது ஜோதிட நூல்கள் பிரகாரமும்
மிக எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி
மிகக் கடினமான விஷயங்களைக் கூட விளக்கிப் போகிறீர்கள்
நன்றி தொடர வாழ்த்துக்கள்

gvsivam said...

மிக்க அருமை.
தொடருங்கள்

Anonymous said...

well done

Unknown said...

sukkiran power is less in jadhagam. what to do to compensate it.

Nanjil Siva said...

well done sir,...