GMT என்றால் என்ன?
இந்தப் பதிவை எழுதுவதற்கான அவசியத்தை முதலில் சொல்லி விடுகிறேன். எனது நண்பர் ஒருவர் துபாயில் டாட் நெட் டெவலப்பராக உள்ளார். என்னுடன் கணிணி மென்பொருள் குறித்தும், ஜோதிடம் குறித்தும் அடிக்கடி ஆலோசனை செய்பவர். அமெரிக்காவில் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவருக்கு, யாரோ நண்பர் கொடுத்தார் என்பதற்காக தன்னுடைய விவரத்தையும், இதுவரை செய்த புராஜக்ட் விவரங்களையும், தன்னுடைய அனுபவத்தையும் விவரமாக மின் அஞ்சலில் அனுப்பி இருந்தார். அமெரிக்காவில் அவர் இருக்கிறார், அவரின் மனைவி தமிழ்நாட்டில் மென்பொருள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். எனது
நண்பர் தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு, அவர்கள் இருவரின் மின்னஞ்சல் பரிவர்த்தனைகளை குறித்து என்னுடன் ஆலோசனை செய்தார். 3, 4 மின்னஞ்சல் பரிவர்த்தனைகளுக்கு பின், நண்பரிடம் தொலைபேசியில் இண்டர்வியூ செய்ய விரும்பி, அவருடைய தொலைபேசி எண்ணையும், எந்தக் கிழமையில், நேரத்தில் பேசினால் உங்களுக்கு பேச ஏதுவாக இருக்கும் என்றும் மின்னஞ்சலில் கேட்டிருந்தார். அதற்கு எனது நண்பர், வெள்ளி, சனிக்கிழமைகள் தனக்கு ஓய்வு நாட்கள் என்றும், இண்டர்வியூக்கு தோதான நேரத்தை, அதே நேரம் அமெரிக்காவில் இருக்கும் அவருக்கும் சரியாக வருமா என்றும் ஆராய்ந்து, என்னுடன் பல நேரங்களில் ஜோதிட ஆலோசனை செய்த அனுபவத்தில், நேரத்தை GMT–ல் தெரிவித்து இருந்தார். இதுவரை பதிலே வரவில்லை, போன் அழைப்பும் இல்லை. மீண்டும் ஒரு முறை அதே மின்னஞ்சலை தட்டி விட்டு பார்த்தார். நோ ரெஸ்பான்ஸ்! மீண்டும் மின்னஞ்சல் அனுப்ப அவருக்கு தன்மானம் இடம் கொடுக்கவில்லை. என்ன பிரச்சினையாக இருக்கும்? 3, 4 மின்னஞ்சல்கள் நல்லாதானே 3 வாரங்களாகப் போய்க் கொண்டு இருந்தது, பதிலும் வந்து கொண்டு இருந்தது. தொலைபேசி எண்ணையும், நேரத்தையும் கேட்டாரே, பேசிவிட்டு ரிஜக்ட் செய்து இருந்தாலும் பரவாயில்லையே! வேறு ஆள் கிடைத்து விட்டதாக சொல்லி பெட்டர் லக் நெக்ஸ் டைம் என்று அந்த மேதாவி வாழ்த்தி இருந்தாலும் பரவாயில்லையே! என்று புலம்பி தள்ளி விட்டார். பிறகு நான் தான் அவருக்கு ஆறுதல் சொல்லி உங்கள் மேல் எந்த தவறும் இல்லை, அவருக்கு தான் நீங்கள் கூறிய GMT நேரம் தெரியவில்லை போல, அதனால் அவர் தான் வருத்தப் பட வேண்டும் என்று கூறியவுடன் சிரித்து விட்டார். நம்முடைய நோக்கமே அறிமுகப் பதிவில் கூறியதைப் போல பாஸிடிவ் மனநிலையை உருவாக்குவது தானே!
அமெரிக்க இந்திய மேதாவி தன் அறியாமையை மறைப்பதற்காக அவர் கடைபிடித்த எஸ்கேபிஸம் என்றுதான் சொல்ல வேண்டும்.
சரி இனி சப்ஜெக்ட்டுக்கு வருவோம். GMT என்றால் என்ன? GMT என்பது Greenwich Mean Time என்பதன் சுருக்கமேயாகும். இங்கிலாந்தில் லண்டன் அருகில் உள்ள கிரீன்விச் என்ற இடத்தை (அங்கு தான் ராயல் அப்ஸர்வேட்டரி உள்ளது) ஒரு ஆதாரமாக (reference) வைத்து உலகில் உள்ள நாடுகளுக்கு எல்லாம் நேர வித்தியாசத்தை கணக்கீடு செய்வதற்காக ஏற்படுத்தினார்கள். International Meridian Conference in 1884-ல் நடந்த போது கிரீன்விச்சை ஆதாரமாக கொள்ள முடிவெடுத்தார்கள். உதாரணத்திற்கு கும்மிடிபூண்டி எங்கப்பா இருக்கு என்று கேட்டால், சென்னைக்கு அருகில் 30 கி.மீ. வடக்கே உள்ளது என்று சென்னையை ஆதாரமாக (reference) வைத்து சொல்லுவோம்.
அதைப்போல எல்லா நாடுகளின் நேரத்தையும் கிரீன்விச்சை ஆதாரமாக வைத்து சொல்கிறோம். இந்திய நேரமானது 5 மணி 30 நிமிடம் கிரீன்வீச்சில் உள்ள நேரத்தைவிட கூடுதலாக இருக்கும். அதனை சுருக்கமாக +5.30 GMT என்று குறிப்பிடுவார்கள். அதாவது இந்தியாவில் மாலை 5.30 மணி எனில் கிரீன்வீச்சில் மதியம் 12.00 மணியாக இருக்கும். பொதுவாக இந்தியர் எல்லோருக்கும் +5.30 GMT என்பது தெரிந்திருக்கும். ஆனால் மற்ற நாடுகளின் GMT நேர வித்தியாசம் அவ்வளவாக தெரியாது. சிங்கப்பூரில் வேலை செய்பவருக்கு சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் உள்ள நேர வித்தியாசம் தெரியும், GMT நேர வித்தியாசமும் தெரிந்திருக்கலாம், ஆனால் அவரிடம் லிபியாவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள நேர வித்தியாசத்தைக் கேளுங்கள் தெரியாது என்றுதான் சொல்லுவார். இந்த மாதிரியான குழப்பத்தில்தான் அவர் போன் செய்யவில்லையோ! இருப்பினும் நண்பருக்கு நல்ல எதிர்காலம் அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோமாக!
எல்லாம் சரி அந்த 5.30 மணி நேர வித்தியாசத்தை எப்படி கணக்கிடுவது? அடுத்த பதிவில் பார்க்கலாமா?
கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com
அடுத்த பதிவு : ஜோதிடம் கற்கலாம் வாங்க -8
ஜோதிட நகைச்சுவை
ஆசிரியர் : பூமி தன்னைத்தானே சுற்றி, சூரியனைச் சுற்றுமா? இல்ல சூரியன் தன்னைத்தானே சுற்றி பூமியைச் சுற்றுமா?
மாணவர் : ????
ஆசிரியர் : என்னப்பா பதிலை சொல்லு
மாணவர் : அடப் போங்க சார். எனக்குத் தலையைச் சுத்துது.
ஆசிரியர் : சரி உனக்கு இலக்கணமாவது தெரியுதான்னு பார்க்கலாம்
மாணவர் : சரி கேளுங்க !
ஆசிரியர் : முருகன் வீட்டுக்குப் போனான். இது என்ன காலம்?
மாணவர் : அது அவன் நல்ல காலம் சார்!
ஆசிரியர் : இது எனக்கு போதாத காலம், உனக்கு பாடம் சொல்லித் தர வந்தேனே
மாணவர் : சரி என்னை கேட்டது போதும். இப்ப நான் கேட்கிறேன்
ஆசிரியர் : சரி கேள்
மாணவர் : உங்களுக்கு ஜோதிடம் தெரியுமா?
3 comments:
//மாணவர் : எனக்கு பிடித்த சப்ஜெக்ட் கணக்கு தான். அதில கேளுங்க சார்
கணக்கு பாடம் மட்டுமா, கேர்ள் பிரண்ட்ஸ் கணக்கு செய்யவும் பிடிக்கும் போல...
நண்பர் கிஷோர் அவர்களே! ஜோக்கை படிக்கவும், சப்ஜக்டை பிடிக்கவும். வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். புரிந்த கொள்ள சிரமமான ஒரு அஸ்ட்ரோ சப்ஜக்டை உங்களுக்காக எளிதில் புரியும்படி எழுதுகிறேன். அதற்கு இடையே கொஞ்சம் ரிலாக்ஸ் வேண்டும் என்பதற்காகவும், ஜோக்ஸ் மூலமாக ஏதாவது மெஸேஜ் சொல்ல முடியுமா என்று கருதியும்தான் நகைச்சுவையையும் எழுதி வருகிறேன். அதனால், நீங்கள் ஜோக்கிற்காக மெனக்கிட்டு பின்னூட்ட்டம் எழுதாமல், பாடத்தை கவனமுடன் படித்து அதைப் பற்றி உங்களுடைய கருத்தை, அல்லது சந்தேகங்களை பதிவை செய்தால் தாங்கள் கேட்கும் கேள்வியின் வாயிலாக நான் தரும் பதில், மற்றவர்களுக்கும் பயன்படும்.
அன்பன்
இராம்கரன்
அடுத்த பதிவு : ஜோதிடம் கற்கலாம் வாங்க 8
எப்ப சார்?
Post a Comment