ராசி மண்டலத்தில் நட்சத்திர பங்கீடு
நாம் ஏற்கனவே கடந்த பதிவுகளில் கூறியபடி, ராசி மண்டலத்தில் உள்ள 108 பாதங்களை 12 ராசிக்கும் பங்கிட்டால், ராசி ஒன்றுக்கு 9 பாதம் வரும் என்று பார்த்துள்ளோம். ஒரு நட்சத்திரத்துக்கு 4 பாதம் என்பதால், ஒரு ராசியில் 3 நட்சத்திரங்கள் முழுமையாக வருவதில்லை. உதாரணத்திற்கு, மேஷ ராசியை எடுத்துக் கொண்டால், அஸ்வினியின் 4 பாதங்களும், பரணியின் 4 பாதங்களும், கார்த்திகையின் முதல் பாதம் (1 பாதம்) மட்டுமே வரும். இப்படி மேஷ ராசியின் 9 பாதங்களும் 3 நட்சத்திரத்திற்கு பிரித்து அளிக்கப்பட்டுள்ளது. கார்த்திகையின் மற்ற 3 பாதங்களும் (அதாவது 2,3,4 ஆம் பாதங்கள்) அடுத்த ராசியான ரிஷபத்தில் வரும். இப்படியாக 27 நட்சதிரங்களும், 12 ராசிகளுக்கு பங்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு பின்வரும் அட்டவணையை பார்க்கவும்.
ராசி | நட்சத்திரம் | பாத எண் | மொத்த பாதங்கள் | |||
மேஷம் | அஸ்வினி | 1 | 2 | 3 | 4 | 4 |
பரணி | 1 | 2 | 3 | 4 | 4 | |
கார்த்திகை | 1 |
|
|
| 1 | |
ஆக மொத்த பாதங்கள் | 9 | |||||
ரிஷபம் | கார்த்திகை |
| 2 | 3 | 4 | 3 |
ரோகினி | 1 | 2 | 3 | 4 | 4 | |
மிருகசீரிடம் | 1 | 2 |
|
| 2 | |
ஆக மொத்த பாதங்கள் | 9 | |||||
மிதுனம் | மிருகசீரிடம் |
|
| 3 | 4 | 2 |
திருவாதிரை | 1 | 2 | 3 | 4 | 4 | |
புனர்பூசம் | 1 | 2 | 3 |
| 3 | |
ஆக மொத்த பாதங்கள் | 9 | |||||
கடகம் | புனர்பூசம் |
|
|
| 4 | 1 |
பூசம் | 1 | 2 | 3 | 4 | 4 | |
ஆயில்யம் | 1 | 2 | 3 | 4 | 4 | |
ஆக மொத்த பாதங்கள் | 9 | |||||
சிம்மம் | மகம் | 1 | 2 | 3 | 4 | 4 |
பூரம் | 1 | 2 | 3 | 4 | 4 | |
உத்திரம் | 1 |
|
|
| 1 | |
ஆக மொத்த பாதங்கள் | 9 | |||||
கன்னி | உத்திரம் |
| 2 | 3 | 4 | 3 |
அஸ்தம் | 1 | 2 | 3 | 4 | 4 | |
சித்திரை | 1 | 2 |
|
| 2 | |
ஆக மொத்த பாதங்கள் | 9 | |||||
துலாம் | சித்திரை |
|
| 3 | 4 | 2 |
சுவாதி | 1 | 2 | 3 | 4 | 4 | |
விசாகம் | 1 | 2 | 3 |
| 3 | |
ஆக மொத்த பாதங்கள் | 9 | |||||
விருச்சிகம் | விசாகம் |
|
|
| 4 | 1 |
அனுஷம் | 1 | 2 | 3 | 4 | 4 | |
கேட்டை | 1 | 2 | 3 | 4 | 4 | |
ஆக மொத்த பாதங்கள் | 9 | |||||
தனுசு | மூலம் | 1 | 2 | 3 | 4 | 4 |
பூராடம் | 1 | 2 | 3 | 4 | 4 | |
உத்தராடம் | 1 |
|
|
| 1 | |
ஆக மொத்த பாதங்கள் | 9 | |||||
மகரம் | உத்தராடம் |
| 2 | 3 | 4 | 3 |
திருவோணம் | 1 | 2 | 3 | 4 | 4 | |
அவிட்டம் | 1 | 2 |
|
| 2 | |
ஆக மொத்த பாதங்கள் | 9 | |||||
கும்பம் | அவிட்டம் |
|
| 3 | 4 | 2 |
சதயம் | 1 | 2 | 3 | 4 | 4 | |
பூரட்டாதி | 1 | 2 | 3 |
| 3 | |
ஆக மொத்த பாதங்கள் | 9 | |||||
மீனம் | பூரட்டாதி |
|
|
| 4 | 1 |
உத்திரட்டாதி | 1 | 2 | 3 | 4 | 4 | |
ரேவதி | 1 | 2 | 3 | 4 | 4 | |
ஆக மொத்த பாதங்கள் | 9 |
இப்படியாக ராசி மண்டலத்தில் உள்ள 108 பாதங்கள், 27 நட்சத்திரங்களாக 12 ராசிகளிலும் பங்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பாடத்தின் மூலமாக, நீங்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், இனி தங்களுடைய நட்சத்திரத்தை கூறும்பொழுது, பாதத்தையும் சேர்த்துக் கூறப் பழக வேண்டும். ஏனெனில் மிருகசீரிடம்-2 எனில் ரிஷப ராசியிலும், மிருகசீரிடம்-3 எனில் மிதுன ராசியிலும் வருவதால், ராசி மாறிவிடும். அதனால் பொதுவாக மிருகசீரிடம் என்று சொல்லாமல், பாதத்தையும் சேர்த்து சொல்ல வேண்டும்.
மீண்டும் சந்திப்போம்
கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com
அடுத்த பதிவு: ஜோதிடம் கற்கலாம் வாங்க - 5
No comments:
Post a Comment