நாழிகை கணக்கு பாரத நாட்டில் மட்டுமே ஆயிரக் கணக்கான வருடங்களாக கணிதத்தில், ஜோதிடத்தில் பயன்படுத்தப்படும் காலக் கணக்கீடாகும்.
தற்பொழுது உலகளவில் பயன்பாட்டில் உள்ள மணி நிமிஷ கணக்கை முதலில் காணலாம்.
1 நாள் = 24 மணிகள்
1 மணி = 60 நிமிஷங்கள்
1 நிமிஷம் = 60 வினாடிகள்
வினாடியைப் பிரித்து, 60 ன் மடங்குகளாக சொல்வதற்கு காலக்கணக்கீட்டு முறையோ, பெயரோ மேலை நாட்டு கணிதத்தில் இல்லை. தற்பொழுது கணிப்பொறி காலத்தில் ஏதுவாக, மில்லி செகண்ட், மைக்ரோ செகண்ட், நேனோ செகண்ட் என்று 1 வினாடியைப் பிரித்து 1000ன் மடங்குகளாக சொல்லப்படுகிறது.
சரி, இப்பொழுது நாழிகை கணக்கீட்டைப் பார்க்கலாம்.
1 நாள் = 60 நாழிகை
1 நாழிகை = 60 வினாடி
1 வினாடி = 60 தர்ப்பரை
1 தர்ப்பரை = 60 விதர்ப்பரை
இப்படி போகுதய்யா நம்முடைய காலக் கணக்கீடு. இதற்கு மேலும் 60ன் மடங்குகள் உள்ளது. இந்தப் பதிவின் அளவு கருதியும், எல்லோரின் நேரமின்மை கருதியும் இது போதும் என்று கருதுகிறேன். சரி தலைப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு வரலாம் !
1 நாளை ஆங்கில முறைப்படி 24 பாகமாக பிரிப்பது துல்லியமா? அல்லது இந்திய ஜோதிடவியல் கூறுவது போல 60 பாகமாக பிரிப்பது துல்லியமா? நாழிகை கணக்கு நமக்கு தெரியவில்லை என்பதற்காக, சீ ! சீ ! இந்த பழம் புளிக்கும் என்று ஏமாற்றத்தில் சொல்லும் புத்திசாலி நரியின் நிலைமையில் தான் நம்மில் பலர் இருக்கிறார்கள்.
அதனால், ஜோதிட காலக் கணக்கீட்டில் நாழிகை கணக்கே மிகவும் துல்லியமாகும், அவசியமாகும். ஒரு சில பஞ்சாங்க கணித வல்லுனர்கள் பொது மக்களின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு, கொஞ்சம் சிரமப்பட்டு, கணிதம் செய்து, மணி நிமிஷங்களில் பஞ்சாங்கங்களை வெளியிடுகிறார்கள். அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குவோமாக ! இப்படி காலத்திற்கேற்ப நம்மை புதுப்பித்துக் கொள்வதனால் தானய்யா இந்திய ஜோதிடவியல் தலை நிமிர்ந்து நிற்கிறது. உலக அளவில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில், திருக்கணித முறையை பயன்படுத்துகிறோம்.
ஜோதிடத்தில் நாழிகை கணக்கு அவசியமே ! அவசியமே ! என்று தீர்ப்பு சொல்லி இந்த பட்டிமன்றத்தை நிறைவு செய்வோம்.
கற்றல்! தெளிதல்! தெளிவித்தல் ! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com
அடுத்த பதிவு : நேமாலஜி என்றால் என்ன?
ஜோதிட நகைச்சுவை
சகட யோகம்
ஜோதிடர்: உங்களுக்கு சகட யோகம் உள்ளது.
சங்கரன் நாயர்: சகட யோகம் எந்தா செய்யும்?
ஜோதிடர்: மேலே போய் பின்ன தலைகீழா கீழே வருவீங்க?
சங்கரன் நாயர்: எண்ட தொழிலை குறிச்சு... அது எங்கன தலை கீழாகும்னு பறையனும் !
ஜோதிடர்: நீங்க இப்ப என்ன வியாபாரம் செய்றீங்க ?
சங்கரன் நாயர்: ஞான் இப்போ “வைர” வியாபாரம் செய்யுன்னு
ஜோதிடர்: இனிமேல் நீங்க “ரவை” வியாபாரம் செய்ய வேண்டி வரும்.
சங்கரன் நாயர்: ஓ சகட யோகம் இப்படித்தான் தலை கீழா வேலை செய்யுமா? எண்ட குருவாயூரப்பா ! காத்து ரக்ஷிக்கனும் !
ஜோதிடர்: ஓ நாயரே ! அப்படியே குருவாயூரப்பனிடம் “முல்லைப் பெரியாறு அணையையும்” காத்து ரக்ஷிக்கனும்னு பிரார்த்தனை செய் !
7 comments:
திரு.இராம்கரன்,
அருமையான, நிறைவான பதிவு நண்பரே..
ஜோதிட நகைச்சுவை அருமை!!!
வாழ்த்துக்கள்....
நகைச்சுவை அருமை!!!
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்களுக்கு நன்றி!
அன்பன்
இராம்கரன்
உங்கள் வலைப்பூ மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. மிக்க நன்றி...!
விகாரி வருடம் சித்திரை மாதம் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 35 1/4 நாழிகை எனில் எத்தனை மணி ஐய்யா
திரு. ஞானசவுந்தரம், தங்கள் ஆர்வத்திற்கு நன்றி !
அன்றைய தேதியில் சூரிய உதயம் என்னவென்று காலண்டரில் பார்த்து எழுதிக் கொள்ளவும். 1 நாழிகைக்கு 24 நிமிடங்கள் என்று கொண்டு, உங்களின் 35 1/4 நாழிகையை பெருக்கினால் வரும் தொகை சூரிய உதயத்தில் இருந்து எத்தனை நிமிடங்கள் சென்றுள்ளன என்று தெரியும். மொத்த நிமிடங்களை 60-ஆல் வகுத்தால் மணி கிடைக்கும். இத்துடன் எழுதி வைத்துள்ள சூரிய உதயத்தைக் கூட்டினால் அப்பொழுது இருந்த கடிகார மணி கிடைக்கும்.
வணக்கம் ஐயா,
உங்களின் அனைத்து பதிவுகளும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி
Post a Comment