மீனம் பூரட்டாதி 4 உத்திரட்டாதி 1,2,3,4 ரேவதி 1,2,3,4
| மேஷம் அஸ்வினி 1,2,3,4 பரணி 1,2,3,4 கார்த்திகை 1 | ரிஷபம் கார்த்திகை 2,3,4 ரோகினி 1,2,3,4 மிருகசீரிடம் 1,2 | மிதுனம் மிருகசீரிடம் 3,4 திருவாதிரை 1,2,3,4 புனர்பூசம் 1,2,3 |
கும்பம் அவிட்டம் 3,4 சதயம் 1,2,3,4 பூரட்டாதி 1,2,3
|
இராசி சக்கரம் | கடகம் புனர்பூசம் 4 பூசம் 1,2,3,4 ஆயில்யம் 1,2,3,4 | |
மகரம் உத்திராடம் 2,3,4 திருவோணம் 1,2,3,4 அவிட்டம் 1,2
| சிம்மம் மகம் 1,2,3,4 பூரம் 1,2,3,4 உத்திரம் 1
| ||
தனுசு மூலம் 1,2,3,4 பூராடம் 1,2,3,4 உத்திராடம் 1
| விருச்சிகம் விசாகம் 4 அனுஷம் 1,2,3,4 கேட்டை 1,2,3,4
| துலாம் சித்திரை 3,4 சுவாதி 1,2,3,4 விசாகம் 1,2,3
| கன்னி உத்திரம் 2,3,4 அஸ்தம் 1,2,3,4 சித்திரை 1,2
|
பஞ்சாங்கத்தில் கிரக பாத சாரங்கள் என்ற தலைப்பில் பின் வருமாறு கொடுக்கப்பட்டிருந்தால் அதனை இராசி சக்கரத்தில் எவ்வாறு அடைப்பது என்று பார்ப்போம்.
கிரகம் | நட்சத்திர பாத சாரம் |
சூரியன் | சித்திரை - 3 |
சந்திரன் | திருவோணம் -2 |
செவ்வாய் | புனர்பூசம் - 4 |
புதன் | ஆயில்யம் - 1 |
குரு | கார்த்திகை - 3 |
சுக்கிரன் | அஸ்தம் - 2 |
சனி | அனுஷம் - 3 |
இராகு | சதயம் - 3 |
கேது | பூரம் - 3 |
மேலே கொடுக்கப்பட்டுள்ள இராசி சக்கரத்தில் உள்ள நட்சத்திர பங்கீட்டை கவனித்து அதன் படி கிரகங்களை இராசி சக்கரத்தில் எழுதலாம். உதாரணத்திற்கு, சூரியன் சித்திரை - 3 என பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டிருந்தால், சூரியனை துலா ராசியில் எழுத வேண்டும். இவ்வாறே மற்ற கிரகங்களையும் எழுதினால், சக்கரத்தில் அடைக்க பழகினால், நீங்கள் ஜோதிட தொடக்கப் பள்ளியில் 1 ஆம் வகுப்பில் நல்ல முறையில் தேர்ச்சி பெற்றுள்ளீர்கள் என்று காலரை உயர்த்தி சொல்லிக் கொள்ளலாம்.
|
|
குரு |
|
இராகு |
இராசி சக்கரம் |
செவ்வாய் புதன் | |
சந்திரன் |
கேது | ||
|
சனி |
சூரியன் |
சுக்கிரன் |
அய்யா ! அதெல்லாம் சரி தான். பஞ்சாங்கம் என்று ஒரு சமாச்சாரம் சொல்லுகிறீர்களே அதனை கொஞ்சம் விளக்குங்கள், என்று ஒரு மாணவர் கேட்பதை யாம் ஞான திருஷ்டியில் அறிவோம் ! பெரும்பாலும் ஜோதிடம் அறியாத பலரும், நாள் நட்சத்திரம் பார்ப்பதற்காக பஞ்சாங்கத்தைப் பற்றி தெரிந்து வைத்து இருக்கிறார்கள். இருப்பினும், பஞ்சாங்கத்தின் பயன்பாட்டைப் பற்றி தெரியாதவர்களுக்காக அடுத்த பதிவினை எழுதலாம் என்று நினைக்கிறேன், அது வரை பொறுமை காக்கவும்.
கற்றல் ! தெளிதல் ! தெளிவித்தல் ! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com
அடுத்த பதிவு : பஞ்சாங்கம் என்றால் என்ன?
2 comments:
தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது.
SImple to read.. Please read this book... It may help you ... http://www.vallalyaar.com/?p=409
Post a Comment