நட்சத்திரங்கள் 27
1. அசுவினி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோகிணி
5. மிருகசீரிடம்
6. திருவாதிரை
7. புனர்பூசம்
8. பூசம்
9. ஆயில்யம்
10. மகம்
11. பூரம்
12. உத்திரம்
13. அஸ்தம்
14. சித்திரை
15. சுவாதி
16. விசாகம்
17. அனுஷம்
18. கேட்டை
19. மூலம்
20. பூராடம்
21. உத்திராடம்
22. திருவோணம்
23. அவிட்டம்
24. சதயம்
25. பூரட்டாதி
26. உத்திரட்டாதி
27. ரேவதி
இந்த 27 நட்சத்திரங்களை ராசி மண்டலத்தின் மொத்த பாகை 360க்கு பங்கிட்டால் 1 நட்சத்திரத்திற்கு 13 பாகை 20 கலை வரும். ஒரு கிரகத்தின் ஸ்புடம் (இருப்பு நிலை) 10 பாகை 3 கலை என்று கொடுக்கப்பட்டிருந்தால் அந்த கிரகம், முதல் நட்சத்திரமான அஸ்வினியில் நிற்கிறது என்று பொருள். 13-20 க்கு மேல் 26-40க்குள் இருந்தால், 2 வது நட்சத்திரமான பரணியில் நிற்கிறது என்று பொருள். இவ்வாறு கிரக நிலைகளை பகுத்து உணரலாம். சரி பாதம் என்ற சங்கதியைப் பற்றி ( இங்கே) சொல்லியிருந்தீர்களே சாமி, அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை !ஏற்கனவே சொல்லியபடி 4 பாதங்கள் சேர்ந்தால் 1 நட்சத்திரம் என்ற கணக்குப்படி, ஒரு நட்சத்திரத்திற்கான 13 பாகை 20 கலையை, 4 பாகமாக பங்கு வைத்தால் 1 பங்குக்கு 3 பாகை 20 கலை வரை வரும், இது தான் நட்சத்திரத்தில் 1 பாதத்தின் அளவு. அதாவது நட்சத்திரத்தின் ஒரு காற்பகுதி ( ஒரு குவார்ட்டர் ! !)
இனி துல்லியமாக சொல்வதென்றால், 3 பாகை 20 கலை வரை 1 ஆவது பாதம், அதற்கு மேல் (அதாவது 3 பாகை 20 கலைக்கு மேல்) 6 பாகை 40 கலை வரை 2 ஆவது பாதம், அதற்கு மேல் 10 பாகை 0 கலை வரை 3 ஆவது பாதம், அதற்கு மேல் 13 பாகை 20 கலை வரை 4 ஆவது பாதம் என்று ஒரு நட்சத்திர அளவான 13 பாகை 20 கலையை 4 பாதங்களாக பிரித்து உணரலாம்.
இப்பொழுது விவரமாக பார்க்கலாம். ஒரு கிரகத்தின் ஸ்புடம் (இருப்பு நிலை) 10 பாகை 3 கலை என்று கொடுக்கப்பட்டிருந்தால் அந்த கிரகம், முதல் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் 4வது பாதத்தில் நிற்கிறது என்று பொருள் காண வேண்டும். அதனை சுருக்கமாக, ஜாதகத்தில் உள்ள கிரக ஸ்புட அட்டவணையில், கிரகத்தின் நேரே அஸ்வினி - 4 என்று எழுதியிருப்பார்கள். மேலே உள்ள பத்திகளை ஒரு முறைக்கு இரு முறை கவனத்துடன் படித்தால் நன்கு விளங்கும். தெளிவு பிறக்கும்.
கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com
அடுத்த பதிவு : ஜோதிடம் கற்கலாம் வாங்க - 4
9 comments:
திரு.இராம்கரன்,
பதிவு எளிமை, அருமை....
நன்றி!!!
மிக்க நன்றி!
திரு. இராம்கரன் அவர்களே ,
மிகவும் எளிமையான் பதிவு, ஆழமான தெளிவுரை
நன்றி!நன்றி!நன்றி!..
இரமேஷ், முத்துக்குமார் அவர்களின் பாராட்டுகளுக்கு நன்றி ! தொடர்ந்து வரும் பதிவுகளை படியுங்கள். Knowledge is Power !
அன்பன்
இராம்கரன்
உங்கள் பதிவு நன்றாக உள்ளது
நீங்கள் கூறியது "இந்த 27 நட்சத்திரங்களை ராசி மண்டலத்தின் மொத்த பாகை 360க்கு பங்கிட்டால் 1 நட்சத்திரத்திற்கு 13 பாகை 20 கலை வரும்."
ஆனால் 360/27 = 13.333333334 வருகிறது. 20 கலை எதை குறிக்கிறது?
6 மணி நேரத்தை 5 ஆல் வகுத்தால் 1 மணி 12 நிமிடம் வரும், எப்படி என்று யோசியுங்கள். பிறகு புரியும். 6/5=1.2 என்று கணக்கிட்டால் சரியாக வராது. இது டெசிமல் (10 அடிமானம் அல்ல) கிடையாது. பாகை, கலை என்பது, மணி, நிமிஷம் போல 60-ன் மடங்காக கணக்கிட வேண்டும். பின்னூட்டத்திற்கு நன்றி, பாராட்டுக்கள்.
எளிமையான விளக்கத்திற் நன்றி
அருமையான பதிவு.எளிமையான விளக்கம். நன்றி.
பாராட்டுக்கு நன்றி ! ஜோதிட மென்பொருள் தயாரிப்பில் அதிக நேரம் மற்றும் உழைப்பை செலுத்துவதால் தொடர்சசியாக பதிவுகள் எழுத இயலவில்லை .
Post a Comment