Thursday, September 13, 2012

கண்ணடித்து கலக்கும் மூவர் – 4


கடந்த பதிவில் குரு பார்வையை ஆராய வேண்டி ஒரு எடுத்துக்காட்டு கொடுத்திருந்தேன். அந்த ஜாதகருக்கு குரு தரும் பலன்களை ஆகா ஓகோ என்று எழுதியிருந்தோம். அடுத்து வரும் எடுத்துக்காட்டில் குரு பார்வை செய்யும் சேட்டைகளை பார்க்கலாம்.





குரு




 // ல //







இது ஒரு மகர லக்ன ஜாதகம், 3, 12-ஆம் வீடுகளுக்கு உரிய குரு துர்ஸ்தானமான 6-ல், நின்றுகொண்டு, தனது 5-ஆம் பார்வையால் 10-ஆம் வீட்டையும், 7-ஆம் பார்வையால் 12-ஆம் வீட்டையும், 9-ஆம் பார்வையால் 2-ஆம் வீட்டையும் பார்க்கிறார்.

இதன் பலன்

வியாபாரம், தொழில் செய்ய வேண்டி அதிக கடன்களை வாங்குவார். சில பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்கலாம் என்ற நினைத்து, அவ்வாறு விற்க இயலாமல் போகலாம். குடும்ப செலவுகளை கட்டுபடுத்த முடியாமல் ஜாதகர் திணறுவார். குடும்பச் செலவு அதிகமாகும். நல்ல காரியங்களுக்கு, வாரி வழங்கி தானம் செய்து விட்டு தனக்கில்லாமல் திண்டாடும் நிலைக்கு உள்ளாவார். ஒரே ஆறுதல், சுபகாரியங்களுக்காக செலவு செய்வார். அதுவும் கடன் வாங்கித்தான் செலவு செய்வார். குழந்தைகள் வகையில் கடன் வாங்காமல், எந்த ஒரு விஷயத்தையும் செய்ய இயலாது. மேலும், ஜாதகர் தம்முடன் பிறந்தவர்களுக்கு, எவ்வளவு செய்தாலும், அவர்கள் நன்றி மறப்பர். அவர்களுக்காகவும் கடன்பட நேரிடும்.

மேற்கண்ட இந்த இரண்டு எடுத்துக்காட்டுகள் மூலம், குரு பார்வையைப் பற்றி தெரிந்து கொண்ட விஷயங்கள் என்னவெனில் :
(1)    குரு பார்க்க கோடி நன்மை என்ற பொது விதி எல்லா ஜாதகத்திற்கும் பொருந்தாது.

(2)    பிறவிப் பயனை அனுபவிக்க முடியாமல் போய் விடக்கூடாது, என்ற கருணையின் அடிப்படையில், தோஷ நிவர்த்தி இவர் பார்வையால் ஏற்படும். நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளவும் தோஷ நிவர்த்தி என்பது அடிப்படை வாழ்வுரிமை அவ்வளவே.

(3)    குருவின் பாவாதிபத்தியத்தை பொருத்து அவரை சுபர், அசுபர் என்று கூற வேண்டும்.

(4)    ஜாதகத்தில் அவர் வீற்றிருக்கும் வீட்டைப் பொருத்து, தன்னுடைய குணத்தை மாற்றிக் கொண்டு, பார்வையால் நன்மை, தீமைகளை பலன்களாகத் தருவார்.

(5)    குருவின் காரகத்துவம், பாவாதிபத்தியம், சார, நவாம்ச பலம் இவற்றோடு, எந்த கிரகத்தின் வீட்டில் உள்ளாரோ அவருடய குணத்தையும் கலந்து தன்னுடை தசா-புக்தி காலத்திலும், மற்ற தசைகளின் புக்திகளிலும் பலன்களைத் தருவார்.

(6)    அவர் எந்த வீடுகளின் மீது பார்வை செலுத்துகிறாரோ, அந்த வீடுகளின் பலன்களையும் தருவார்.

மேற்கூறிய ஜோதிட விதிகள் பொதுவாக எல்லா கிரகங்களுக்கும் பொருந்தும். மேலும் பல நுணுக்கமான, முக்கிய ஜோதிட விதிகள் உள்ளன, அவைகள் ஆரம்ப நிலையில், ஜோதிடம் பயில்பவர்களுக்கு இப்பொழுது அவசியம் இல்லை. பிறிதொரு சமயம் Advanced Predictive Astrology என்ற தலைப்பில் ஆராயலாம்.

மீண்டும் சந்திப்போம்
கற்றல் ! தெளிதல் ! தெளிவித்தல் ! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com



பிற்சேர்க்கை

அடிப்படை வாழ்வுரிமை.
அதாவது, அந்த குறிப்பிட்ட தோஷத்திலிருந்து தனது பார்வையால் குரு காப்பாற்றிவிடுவார் அவ்வளவே, மற்ற சமாச்சாரங்கள் எல்லாம் ஜாதகத்திற்கு ஏற்ப மற்ற கிரகங்கள்தான் கொடுக்க வேண்டும். இன்னும் எளிமையாக சொல்வதென்றால், சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவனை, எங்கிருந்தோ ஓடி வந்து தூக்கி காப்பாற்றி விட்டு செல்வார், ஆனால், மினரல் வாட்டர், ஐஸ்கிரீம் எல்லாம் வாங்கித் தர மாட்டார். நீங்களே (நடப்பு தசா) தள்ளாடி நடந்து சென்று வாங்கிக்கொள்ள வேண்டியது தான் அல்லது மற்றவர்கள் (நடப்பு புக்தி),  உங்கள் மேல் பாவப்பட்டு வாங்கித் தருவார்கள். அப்படி எல்லாமும் அவரே தான் செய்ய வேண்டுமெனில், அவர் ஜாதக அடிப்படையில், சுப கிரகமாக இருந்து, சுப ஸ்தானங்களில் நல்ல நிலையில் இருக்க வேண்டும். ஆனால் உதாரண ஜாதகத்தில் குரு அப்படியில்லை.


மீண்டும் சந்திப்போம் !

6 comments:

rajeee said...

Hello Sir,
I have read all your articles, very beautiful write-up. Keep us posted, Thanks
Rajesh

ramkaran said...

நன்றி இராஜேஷ்!

Narmatha said...

அய்யா தங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமை.
நான் ஜோதிடம் கற்க பல புத்தகங்களை வாங்கி குழப்பி கொண்டு இருந்தேன். தங்களின் எழுத்து நடை மிக அருமை. எளிமையாகவும் புரியும் வண்ணமும் கற்றுக் கொள்ளும் ஆர்வர்தை தூண்டும் விதமாக உள்ளது.
இனி அடுத்து பதிவிற்காக எப்போது என்று காத்து கொண்டு இருக்கிறேன்.
நன்றி.

நர்மதா.நா

முத்து said...

நண்பரே, வணக்கம்.

இனிய தமிழில் சோதிடம் பற்றிய தங்களின் கட்டுரைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. கடந்த சில மாதங்களாக எந்த வலைப்பதிவையும் காணோம். விரைவில் தொடர வேண்டுகிறேன்.

- முத்து.

ramkaran said...

வேலை மிகுதி காரணத்தால் பதிவு இட இயலவில்லை. வெகு விரைவில் மீண்டும் சந்திப்போம். தங்களின் விருப்பம் நிறைவேறும். பின்னூட்டத்திற்கு, நன்றி !

இராஜராஜேஸ்வரி said...

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.