Sunday, May 8, 2011

பேஸ்புக் தமிழ் அன்பர்களுக்காக இந்த பதிவு

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் என்பவரால் 2004 ல் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக். தன்னை கைவிட்டுப்போன காதலியின் நினைவிலிருந்து மீள்வது எப்படி என்று ஒரு நாள் இரவு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த ஐடியா அவருக்கு வந்தது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் உண்டு. அங்கு பயிலும் மாணவர்கள், வேலை செய்யும் ஆசிரியர்கள் தொடர்பான விவரங்கள் அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்றை மாணவர்களுக்கு அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் கொடுத்து வந்தது. அந்தப் புத்தகத்தை மாணவர்கள் ஃபேஸ்புக் என்று குறிப்பிடுவது வழக்கம். இந்த ஐடியாவைத்தான் ஸுக்கர்பெர்க் எடுத்துக் கொண்டார். முதலில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பிறகு மற்ற கல்லூரி மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இப்போதோ 13 வயதுக்கும் மேற்பட்ட எவரும் இதில் உறுப்பினராக முடியும். அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டும் இருந்தால் போதும்.

காதலில் மனம் உடைந்த இளைஞனால் விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த இணைய தளம், இப்போது அந்த இளைஞனை உலகின் முக்கியமான பணக்காரர்களில் ஒருவராக ஆக்கி இருக்கிறது.

இதில் உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. இவ்வளவுக்கும் ஃபேஸ்புக் லாபம் குவிக்கும் நிறுவனமாக இல்லை. 2009-ம் ஆண்டில்தான் முதன்முதலாக அது லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியது. ஆனால், அதற்கு முன்பிருந்தே மிகுந்த போட்டி!
பேஸ் புக்கின் வரலாறு அனைவரும் அறிந்ததே. அதிகம் அறிய விரும்புவோர் Social Network என்ற ஆங்கிலப் படத்தை பார்த்தால் விளங்கும். தொடக்கத்தில் பள்ளி, கல்லூரி பெண்களின் முகத்தை ஒப்பிட்டு பார்த்து மதிப்பெண் போடுவதில் ஆரம்பித்தது. 3 வருடத்துக்கு முன்பு வரை, இந்த இணைய தளம் புகைப் படங்களை சேமித்து வைப்பதற்கும், அதனை தொலைவில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் காண்பதற்காக மட்டுமே பயன்படுத்தபட்டு வந்தது. ஆனால் இன்றைய சூழலில் பேஸ்புக் ஒரு promotional tool ஆக மாறிவிட்டது. அதாவது தங்களின் பொருட்களை விளம்பரபடுத்தவும், சில சேவை இணைய தளங்களுக்கு வாசகர்களை கொண்டு செல்லவும், பல தரப்பட்ட குழுக்களுடன் விவாதிக்கவும் பயன்பட்டு வருகிறது.

இப்பொழுது
நாம் குழுக்களைப் பற்றி பார்க்கலாம்
.

குழுவின்
நோக்கம் / நன்மை
கூட்டுச்
செயல்பாட்டிலிருந்து விலகிப்போய்விட்ட மனிதன் தனக்கென ஒரு சமூகக் குழுவை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறான். அந்த விருப்பத்தை இத்தகைய இணைய தளங்கள் நிறைவு செய்கின்றன. தனிப்பட்ட பிரச்னைகளை மட்டுமின்றி, சமூகப் பிரச்னைகளையும் இத்தகைய தளங்களில் பகிர்ந்துகொள்ள முடிகிறது. அதற்கு ஒரு உதாரணம் தான் சமீபத்தில் நடந்த எகிப்திய கிளர்ச்சி.

எல்லாவற்றையும் கூட்டமாகச் செய்தே பழகிப்போன இந்திய மனோபாவத்துக்கு ஃபேஸ்புக் மிகவும் பொருத்தமாயிருப்பதால், மற்ற நாடுகளையெல்லாம் வீழ்த்திவிட்டு இந்தியர்கள் இதை ஆக்கிரமிக்கப்போவது நிச்சயம்.

ஒரே
எண்ணம், சிந்தனை உள்ள நண்பர்கள் ஒன்றிணைவதே குழுவின் நோக்கமாகும். அதாவது நீங்கள் சமையல் கலையில் ஆர்வம் உள்ளவர் என்றால், சமையல் கலையில் என்ன படிக்கலாம், எங்கே படிக்கலாம் அதனை படிக்க ஆகும் செலவு, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளவர் எனில், இலவசமாக எங்கே படிக்கலாம் யார் சொல்லித்தருவார்கள் போன்ற விவரங்களைத் தங்களுக்குள் பரிமாறிக் கொள்வதே குழுவின் நோக்கமாகும். சிலர் தங்களுக்கு தெரிந்த மெனுவை அடுத்தவருக்கு சொல்லி கொடுக்கும் பரந்த மனப்பான்மை உள்ளவராகவும் இருப்பார்கள். சிலர் மேலும் ஏதாவது புதிய உணவு வகைகளை எப்படி செய்வது எனத் தெரிந்து கொள்ளலாம் என்றும் இந்த குழுவில் சேர்கின்றனர்.

ஃபேஸ்புக்
என்பது பல்வேறு நிகழ்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிடவும் பயன்படுகிறது. அதன்மூலம் எளிதில் உங்கள் நண்பர்களை ஒரு நிகழ்வுக்கு அழைத்துவிடலாம். தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் பலர் தங்களது திரைப்படங்கள் பற்றிய செய்திகளை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு விளம்பரப் படுத்தி வருகிறார்கள். தாங்கள் படிக்கும் நல்ல பல கட்டுரைகளை மற்ற நண்பர்களின் பார்வைக்காக ஃபேஸ்புக்கில் போடுவது இப்போது அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப பத்திரிகைகள் தங்களது இணைய தளங்களை வடிவமைத்து வருகின்றன. ஃபேஸ்புக்கில் நண்பர்களாக இருப்பவர்கள் இப்போது ஏதேனும் ஓர் இடத்தில் கூடிக் குறிப்பிட்ட பிரச்னைகள் பற்றி விவாதிக்கிறார்கள். இப்படியான சந்திப்புகள் இளம் தொழில் முனைவோருக்குப் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றன.

குழுவின்
குறைபாடு / தீமை

தற்போதைய ஃபேஸ்புக்கின் பரிணாம வளர்ச்சி, அசுர வளர்ச்சி பல முகங்களாக வளர்கிறது. அது ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் போய், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்களும் தங்கள் கருத்துக்களை மக்களிடம் சேர்க்க பயன்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் பலர் புகைப் படத் தேடலோடு நிறுத்திக் கொள்கிறார்கள் என்பது வேதனையாகத்தான் இருக்கிறது.

ஃபேஸ்புக்
போன்ற தளங்களால் நன்மைகள் மட்டுமின்றி, தொந்தரவுகளும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஃபேஸ்புக்கில் நாம் பகிர்ந்துகொள்கிற விவரங்களை யார் யார் பார்க்கலாம் என நாமே வரையறுத்துக்கொள்கிற வசதி இருக்கிறது. நம்மு டைய 'ப்ரைவஸி' பாதுகாக்கப்படுகிறது என சொல்லப்பட்டாலும் ,நாம் அதில் வெளிப்படுத்துகிற விவரங்களை மற்றவர்கள் துஷ்பிரயோகம் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. அந்த குழுவில் உள்ளவர்களின் விவரங்களை, புகைப்படங்களை பார்க்கவுமே மிகப் பலர் பயன்படுத்தி வருகிறார்கள்.

என்னுடைய அறிவுரை என்னவெனில், நெட் பேங்கிங் அல்லது ஆன்லைன் வர்த்தகம் செய்துவரும் தங்கள் மின்-அஞ்சல் முகவரியை வைத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது. முடிந்தவரை ஹாக்கிங்கை தவிர்க்கலாம். ஏனெனில் மாணவர் பருவத்திலேயே அந்த புத்திசாலி இளைஞன் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தரவு-தளத்தில் (Data base) இருந்து, விவரங்களை, பல்கலைக்கழகத்தின் அனுமதியின்றி எடுத்தவர் தானே. சட்ட சிக்கலிலும் சிக்கினார். அதனால் முடிந்தவரை கான்ஃபிடன்ஷியல் விஷயங்களை பகிர்ந்துகொள்வது சிறந்ததன்று.

அது மட்டுமின்றி, ஃபேஸ்புக்கிலிருந்து நாம் விலகிவிட்டாலும் நாம் வெளியிட்ட தகவல்கள் இணையத்தில் இருந்துகொண்டுதான்இருக்கும். அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகள் எளிதாக இல்லை. ஆனால், இத்தகைய குறைபாடுகள் ஃபேஸ்புக்கின் பயன்பாட்டை எந்த விதத்திலும் குறைத்துவிடவில்லை. அதனால் .. ஆபத்து... இதனால் தொந்தரவு என்று பேசி நம்மை நாமே முடக்கிக் கொள்வதைவிட தொழில்நுட்பம் தரும் அனுகூலங் களையும் ,சுதந்திரத்தையும் பாதுகாப்புடன்அனுபவிப்பதே புத்திசாலித்தனமாகும்.

இக்கட்டுரையை நான் எழுதுவதற்கான காரணம் என்னவெனில், ஃபேஸ்புக்கில் உறுப்பினர்களாக இருக்கும் தமிழ் அன்பர்களில்
சிலர் தனக்கு தெரிந்தவைகள் மற்றவர்களுக்கும் தெரிந்து இருக்கிறதா என சோதிக்கவும், நையாண்டி செய்யவும்,. அதாவது பிளாக்கில் நான் எழுதி வரும் கட்டுரைக்கு தற்பொழுது எந்த சம்பந்தமும் இல்லாமல் சில கேள்விகளைக் கேட்டு வருகிறார்கள். அது சம்பந்தமான கட்டுரை பல கட்டுரைக்கு பிறகு வந்தால் தான் வரிசைக்கிரமமாக (சீக்வன்ஸ்) இருக்கும். சிலர் அதனை இப்போதே விளக்கும்படி கேட்கிறார்கள். மேலும் நம்முடைய வலைப்பூவிற்கு வருகை தருபவர்களின் எணிக்கைப்பற்றிய புள்ளி விவரங்களைக் காணும்போது, கூகிளில் தேடி வருபவர்களின் எண்ணிக்கை தான் மிகுதியாக இருக்கிறது. ஃபேஸ்புக்கில் நுழைந்து அதன்பின் தனக்கு வேண்டிய விவரங்களை தேடினால், நமக்கு தேவையான விவரம் ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தால் மட்டுமே கிடைக்கும் என்பதனால் இன்றும் நிறைய பேர் தங்களுக்கு தேவையான விவரத்தைப் பெற கூகிளை நாடுகிறார்கள். அதனால் ஃபேஸ்புக்கில் உள்ள தமிழ் அன்பர்கள் கேட்கும் கேள்விக்கு, பதிலை வலைப்பூவில் பதிவாக இடுகிறேன். ஏனெனில் ஃபேஸ்புக்கில் பதிவு செய்யாதவர்களுக்கும், கூகிள் தேடல் மூலமாக வருபவர்களுக்கும், மற்ற வலைத்தளத்திலிருந்து வருபவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அதனால் பேஸ் புக் தமிழ் அன்பர்கள் தங்களின் சந்தேகங்களை பிளாக்கில் கமெண்ட் பகுதியில் கேள்வியாக கேட்டால், அதற்கு நான் தரும் பதில் அனைவருக்கும் பயன்படலாம் அல்லவா? பர்சனலாக ஏதேனும் கேள்வி இருப்பின் மின்னஞ்சல் செய்தால், அதற்கு தங்களுக்கு மின்னஞ்சலில் பதில் அளிக்கிறேன்.

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்!
என்ற கொள்கையுடன்

அன்பன்

இராம்கரன்

tamiljatakam@gmail.com

எமது அடுத்தப் பதிவு : ஜோதிடம் கற்கலாம் வாங்க -14

2 comments:

Muruganandan M.K. said...

அருமையான தகவல்கள். நன்றி

ramkaran said...

பாராட்டுதலுக்கு நன்றி! ஏதோ எனக்குத் தெரிந்த விஷயங்களை, அனுபவங்களை தங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் அவ்வளவுதான். தொடர்ந்து வாருங்கள், தங்களின் மேலான யோசனைகளைத் தாருங்கள்.

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்

அன்பன்
இராம்கரன்