Monday, April 29, 2013

வஞ்சிக்கப்படுகிறதா தமிழகம்? பகுதி - 5



இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு நிகழ்ச்சிகளில் தமிழ் சினிமா ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் முழு நீள திரைப்படமான ராஜா அரிச்சந்திரா வெளியானதன் 100வது ஆண்டு விழாவை இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவாக மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் கொண்டாடி.கடந்த 25 ஏப்ரல் 2013 அன்று தொடங்கப்பட்ட இந்த கொண்டாட்டங்கள் 25 ஏப்ரல் 2013 வரை 6 நாட்கள் நடைபெற உள்ளது.

இதில் திரைப்படங்கள், ஆவணப்படங்களை திரையிடுதல், புத்தகங்கள் வெளியீடு, கருத்தரங்கள் மற்றும் நடிப்பு பட்டறைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் பல்வேறு மொழிகளைச் சார்ந்த படங்கள் திரையிடப்பட உள்ளன.

இதில் இந்தி மொழிப் படங்கள் ஐந்தும், பெங்காலி மொழிப் படங்கள் இரண்டும், கன்னடம், ஒரியா, அசாமீஸ் உள்ளிட்ட மொழிகளில் தலா ஒரு படமும் திரையிடப்பட உள்ளன.

இதில் தமிழ்த்திரைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அமைச்சகம் தமிழ் திரையுலகத்திடம் பாரபட்சம் காட்டுவதாக கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்த்திரையுலகினர்,அனைத்து மொழிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

வஞ்சிக்கப்படும் பட்டியல் தொடரும் ...

கற்றல்! தெளிதல் !! தெளிவித்தல்!!! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
tamiljatakam@gmail.com

No comments: