Wednesday, April 3, 2013

தமிழகம் வஞ்சிக்கப்படுகிறதா? பகுதி-3


விவசாயத்தைக் குழிதோண்டி புதைக்கும் எரிவாயுக் குழாய் பதிப்புத் திட்டம்

கம்யூனிச நாடான சீனாவில், புதிய நெடுஞ்சாலை வழித்தடத்தை அமைக்க சர்வே எடுத்த பொழுது, ஒரு வயதான தம்பதியினரின் வீட்டை இடிக்க வேண்டிய சூழ்நிலையில், அவர்களுக்கு எழுத்துப் பூர்வமாக அரசாங்கம் நோட்டிஸ் அனுப்பியது. ஆனால அந்த முதியவர்கள அரசாங்கம் வழங்கும் நஷ்ட ஈட்டில் தங்களுக்கு சம்மதமில்லை என்றும்எங்களுக்கு காலி செய்ய மனமில்லை என்றும், அந்த வீட்டில்தான தாங்கள் வசிக்க விரும்புவதாகவும், பதில் தெரிவித்தனர். அவர்களின் சம்மதமில்லாமல், வலுக்கட்டாயமாக, அவர்களை காலி செய்ய வேண்டாம் என்று அரசு முடிவு செய்து, அந்தக் கட்டிடத்திற்கு தொந்தரவு இல்லாமல், எந்த பாதிப்பும் இல்லாமல், சாலையை அமைத்துள்ளனர்.



ஆதாரமாக இந்தப் பதிவின் கீழ் படத்தை இணைத்துள்ளேன், அதனை சொடுக்கிப் பார்க்கவும்.

ஆனால் நம்முடைய இந்தியத் திருநாடு, மக்களாட்சியில் உள்ள நாடு, விவசாயிகளின் விருப்பமில்லாமல், கலந்தாலோசிக்காமல், பரம்பரை பரம்பரையாக அவர்கள் விவசாயம் செய்து வரும், விளை நிலங்களில் எரிவாயுக் குழாய் பதிக்க திட்டமிட்டுள்ளது. கேட்டால், மத்திய அரசு திட்டமிட்ட பின், கெஜட்டில் வெளியிட்டோம், அதற்கு மக்களிடமிருந்து எதிர்ப்பு வரவில்லை, அதனால் தான் தொடங்கினோம் என்று படித்த அறிவிஜீவிகள் டெல்லியில் இருந்துக் கொண்டு பேட்டி கொடுக்கிறார்கள். 

ஓட்டு பிச்சை கேட்க மட்டும், தெருத் தெருவாக வந்து மக்களை சந்திப்பீர்கள். ஆனால் மக்களுக்கு பாதகமான, விஷயத்திற்கு மக்களை சந்திக்காமல், டெல்லியில் கெஜட்டில் வெளியிட்டு விட்டு ஏ.சி.க்குள் அமர்ந்து கொள்வீர்கள். விவசாயிகள், தங்கள் வாழ்வாதரத்திற்காக வெய்யிலில் போராட வேண்டும், அப்படித்தானே!

7 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு சாதகமாக, காவிரி பிரச்சினையில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கெஜட்டில் வெளியிட வக்கில்லை, 2 ஆண்டுகளில் திட்டம் தீட்டி, கெஜட்டில் வெளியிட்டு அடுத்தவன் விவசாய நிலத்தில் குழாய் பதிக்க வந்து விட்டீர்களாக்கும். நீங்கள் எல்லாம், கோட்டு சூட்டு போட்ட ... என்று நினைக்கத் தோன்றுகிறது. மனிதர்களாக நினைக்கத் தோன்றவில்லை. 

முதலில் உங்கள் சட்டத்தை, அப்பாவி ஏழை விவசாயிகள் பக்கம் நீட்டாதீர்கள். முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்சினைக்கு, உச்ச நீதிமன்றம் தந்த தீர்ப்புகளை காலில் போட்டு மிதிக்கும், கர்நாடகா, கேரள அரசுகளிடம் சென்று உங்களின் சட்ட விசுவாசத்தைக் காட்டுங்கள்.
தமிழர்களுக்கு சாதகமான விஷயங்களை உடனே கெஜட்டில் வெளியிட மாட்டீர்கள், தமிழருக்கு பாதகமான, வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் உடனே கெஜட்டில் வெளியிடுவீர்களோ, என்னே உங்கள் ரூல் ஆஃப் லா, சட்டத்தின் ஆட்சி.  

வாழ்க இந்தியா ! வாழ்க ஜனநாயகம் ! வாழ்க இந்தியாவின் ஒருமைப்பாடு !!

மத்திய அரசால் தமிழகம் வஞ்சிக்கப்படும் பட்டியல் தொடரும்..
கற்றல்! தெளிதல் !! தெளிவித்தல் !!! என்ற கொள்கையுடன்
இராம்கரன்



1 comment:

Ramani S said...

தமிழர்களுக்கு சாதகமான விஷயங்களை உடனே கெஜட்டில் வெளியிட மாட்டீர்கள், தமிழருக்கு பாதகமான, வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் உடனே கெஜட்டில் வெளியிடுவீர்களோ, என்னே உங்கள் ரூல் ஆஃப் லா, சட்டத்தின் ஆட்சி


.அருமையான கேள்வி
குறட்டைவிட்டு தூங்கும்செவிடர்களுக்கு
இவைகள் கேட்குமா ?
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்க்கள் //